தங்கப்பிரியர்களுக்கு இன்றும் இன்ப அதிர்ச்சி
கிடுகிடுவென அதிகரித்துச் சென்ற தங்கத்தின் விலை அண்மை நாட்களாக குறைவடைந்து வருகின்றது.
அந்த வகையில் நேற்று 7,000 ரூபாயால் குறைவடைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் 3,000 ரூபாய் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இலங்கையில் 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 314,400 ரூபாயாக விற்கப்படுகின்றது.
24 கரட் ஒரு பவுன் தங்கம் 342,000 ரூபாயாகவும் பதிவாகி உள்ளது.
மத்தியகிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண நிலையால் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
எண்ணெய் விலை அதிகரிக்க பொருட்களின் விலையும், வங்கிகளின் வட்டி வீதமும் அதிகரிக்கும்.
இதன் காரணமாக தங்கம் விலையில் இந்த பாரிய வீழ்ச்சி பதிவாகி உள்ளது.
11/21/2026 10:38:00 AM
தங்கப்பிரியர்களுக்கு இன்றும் இன்ப அதிர்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)

No comments: