நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறைப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் திருமண முறிவுகள் மற்றும் குடும்பப் பிரச்சினைகளால் குடும்பக் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (17) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை அலுவலகத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் மீராலெவ்வை அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுக்கும் சம்மாந்துறை காதி நீதிபதி எம்.எல். தாஸிம் அவர்களுக்கும் இடையில் பிரதேசத்தில் நிலவும் குடும்ப மற்றும் திருமணப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
இதன்போது, சம்மாந்துறைப் பிரதேசத்தில் இடம்பெறும் திருமண நிகழ்வுகள், திருமண நடைமுறைகள், திருமணச் சட்டங்கள், திருமண முறிவுகள், விவாகரத்து மற்றும் 'பஸ்க்' (திருமண ஒப்பந்தத்தை ரத்துச் செய்தல்) உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக, இவ்வாறான பிரச்சினைகளால் கணவன் – மனைவி உறவில் ஏற்படும் விரிசல்கள், குடும்ப உறவுகளில் உருவாகும் பாதிப்புகள் மற்றும் பிரதேசத்தின் குடும்பக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது சம்மாந்துறைப் பிரதேசத்தில் காணப்படும் பல்வேறு குடும்ப மற்றும் திருமணப் பிரச்சினைகளும் அடையாளம் காணப்பட்டன.
மேலும், குறித்த விடயங்கள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சம்மாந்துறை காதி நீதிபதி எம்.எல். தாஸிம் இதன்போது சமர்ப்பித்தார்.
இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், குடும்ப உறவுகளை வலுப்படுத்தி குடும்பக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

No comments: