News Just In

11/26/2026 08:59:00 AM

இலங்கையைத் தாக்கப்போகும் கானி புயல்...! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையைத் தாக்கப்போகும் கானி புயல்...! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை



மலேசியாவின் பிந்துலு பகுதிக்கு வடக்கே உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி, வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் நகர்ந்து, அந்தமான் தீவுகளுக்குத் தெற்காகச் சென்று மத்திய வங்காள விரிகுடாவை அடையும் போது புயலாக வலுப்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலுக்கு மாலைதீவு வழங்கியுள்ள 'கானி' (Kaani) என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.

தற்போதைய வானிலை மாதிரிகளின்படி, டிசம்பர் 5ஆம் திகதி இரவு திருகோணமலைக்கு வடக்கே கொட்டியாரக்குடா ஊடாக இலங்கையைக் கடந்து, வவுனியா, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக அரபிக் கடலை நோக்கி நகரக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எனினும், புயலின் நகர்வுப் பாதையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதுடன், சில வானிலை மாதிரிகள் அது தமிழ்நாட்டில் கரையைக் கடக்கலாம் எனவும் கணித்துள்ளன.

எனவே, புயலின் நகர்வு மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்து, பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments: