
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஏற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று(20.11.2026) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரச நிறைவேற்று அதிகாரிகள் கூட்டுக் குழு இதனைத் தெரிவித்துள்ளது.
20 தொழிற்சங்கங்கள்
பல்வேறு நிறைவேற்றுச் சேவைப் பிரிவுகளைச் சேர்ந்த 20 தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள கொடுப்பனவு அதிகரிப்புகள், தமது சம்பளம் மற்றும் சலுகைகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வளிக்கவில்லை என்று தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
No comments: