News Just In

11/16/2026 02:16:00 PM

காட்டு யானைகள் துவம்சம் செய்ததால் பாதிக்கப்பட்ட 61 குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கி வைப்பு.

காட்டு யானைகள் துவம்சம் செய்ததால் பாதிக்கப்பட்ட 61 குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கி வைப்பு.


(மட்டக்களப்பு மாவட்ட குறூப் நிருபர்)
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டு யானைகள் கிராமங்களுக்கள் நுழைந்து மனித உயிர்களையும், பயிர்களையும், சொத்துக்களையும் துவம்சம் செய்ததன் காரணமாகப் பாதிக்கப்பட்ட 61 குடும்பத்தவர்களுக்கு நஷ்டஈட்டுக் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட 61 பயனாளிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு காசோலைகளை வழங்கி வைத்தார்.
கடந்த ஆண்டும் இவ்வாண்டும் காட்டு யானைகளால் தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள், வீடுகள், சொத்துக்களுக்கான சேதங்களுக்கு 37 மில்லியன் ரூபாயும், விவசாய நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு 21 மில்லியன் ரூபாயும் என மொத்தம் 58 மில்லியன் ரூபாய் பெறுமதியான நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிகழ்வில் பிரதேச உதவிச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர்;, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

No comments: