தமிழ் மக்களுக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கையில்லை” அரசாங்கத்தின்நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்திய சாணக்கியன்.
தமிழ் மக்கள் உள்ளக பொறிமுறையை ஏற்கவில்லை – சர்வதேச விசாரணையே தேவை” –பாராளுமன்றத்தில் சாணக்கியன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளநிலைப்பாடுகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிஅறிவிப்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு,அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான நிலைப்பாட்டை பாராளுமன்றஉறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்இன்று(08.10.2026)பாராளுமன்றத்தில்கேள்விக்குட்படுத்தினார்.
மோதல் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள்
தொடர்பில் நம்பகமான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் என்றும், போதுமானஆதாரங்கள் உள்ளவர்கள் தகுதியான நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்படுவார்கள்என்றும் அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில், இந்தநிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளதா என அவர் கேள்வியெழுப்பினார்.மேலும், பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம்அரசாங்கம் தெரிவித்துள்ள நடவடிக்கைகள் போதுமானவை என அரசாங்கம் கருதுகிறதாஎன்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கேள்வி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகளில் 2018ஆம் ஆண்டின்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதா, அரச அதிகாரிகள் தொடர்புபட்ட நம்பகமானகுற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குகள் தொடரப்படுகின்றனவா என்பதுகுறித்தும் சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் தெரிவித்துள்ள நிலைப்பாட்டைஅமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தினார்.
“கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பல்வேறு பெயர்களில் உள்ளகபொறிமுறைகளை முன்வைத்துள்ளன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கஆணைக்குழு, உள்ளக விசாரணை, உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற பல்வேறுஅணுகுமுறைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தமிழ் மக்களுக்கு இதுவரை நீதிகிடைக்கவில்லை” என அவர் சுட்டிக்காட்டினார்.முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில்விக்கிரமசிங்க ஆகியோரின் காலங்களில் முன்வைக்கப்பட்ட தீர்வுகளும்பெரும்பாலும் உள்ளக பொறிமுறைகளையே அடிப்படையாகக் கொண்டிருந்ததாக அவர்குறிப்பிட்டார்.
“பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளக பொறிமுறையை நிராகரிக்கின்றனர்”
“பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உள்ளக பொறிமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை.அப்படியிருக்கும்போது, அந்த மக்களின் நம்பிக்கையைப் பெறாத உள்ளகபொறிமுறையின் ஊடாக எவ்வாறு நீதி வழங்க முடியும்?” என சாணக்கியன்கேள்வியெழுப்பினார்.
அத்துடன், சர்வதேச பங்களிப்பு, சுயாதீன அரச வழக்கறிஞர்கள், சர்வதேச
தடயவியல் நிபுணத்துவம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான
பாதுகாப்பு, அத்துடன் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச
குற்றங்கள் தொடர்பில் கட்டளைப் பொறுப்பு உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம்ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ள நிலைப்பாட்டைவெளிப்படுத்துமாறும் அவர் கோரினார்.
செம்மணி மனிதப் புதைகுழி – சர்வதேச விசாரணை ஏன் இல்லை?
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாகவும் சாணக்கியன்
முக்கிய கேள்வியை முன்வைத்தார். 582 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகக்கூறப்படும் நிலையில், ஏன் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படக்கூடாது?சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புடன் ஏன் டி.என்.ஏ. பரிசோதனைகள்மேற்கொள்ளப்படக்கூடாது? என அவர் கேள்வியெழுப்பினார். “அமைச்சர் உரியநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார். ஆனால்
பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளக விசாரணையை கோரவில்லை. அவர்கள் சர்வதேசரீதியான விசாரணையையே கோருகின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு – கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் கேள்வி பாதுகாப்புப்
படையினரால் முன்னர் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான காணிகள்
விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கும் நிலையில், இராணுவம்,
தொல்பொருள் திணைக்களம், வனத்துறை, வனவிலங்கு திணைக்களம் மற்றும் மகாவலிஅதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் அல்லது உரிமைக்கோரிக்கையின் கீழ் உள்ள காணிகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அரசாங்கம்என்ன தகவல்களை வழங்கியுள்ளது எனவும் சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.
வடக்கு மற்றும் கிழக்கில் பெருமளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகஅரசாங்கம் கூறினாலும், மயிலிட்டி மற்றும் வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளில்மக்கள் தொடர்ந்தும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டங்களில்ஈடுபட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார். “ஒருசில வீதிகள்அல்லது சிறிய பகுதிகளை விடுவித்துவிட்டு அதனை முழுமையான காணி விடுவிப்பு
எனக் கூற முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்வதாக அரசாங்கம் சர்வதேசமட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில், அதற்குப் பதிலாக தயாரிக்கப்படும்புதிய சட்டமூலம் தொடர்பிலும் சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.
அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய சட்டமூலம் இதுவரை
உருவாக்கப்படவில்லை எனவும், முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி புதிய
சட்டமூலம் தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் பாரதூரமான அம்சங்களைக்கொண்ட சட்டமூலம் கொண்டுவரப்படுகிறதா? என்ற கேள்விக்கும் அரசாங்கம்தெளிவான பதிலை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.அத்துடன், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்தல் தொடர்பில் சர்வதேச மட்டத்தில்அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைத் தேர்தல் – “காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடு”
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றசெயற்குழுவிலிருந்து தான் விலகியுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் குறித்த குழுவிலிருந்துவிலகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்த செயற்குழுவின் செயற்பாடுகள் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கையாகஇல்லாமல் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடாகவே காணப்படுகின்றன. எனவேஅதில் தொடர்ந்தும் இருப்பதில் பயனில்லை என்பதால் நான் விலகியுள்ளேன்” எனசாணக்கியன் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான கால அட்டவணை, புதிய அரசியலமைப்புமற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்குஅரசாங்கம் தெரிவித்துள்ள உறுதிமொழிகள் என்ன என்பதையும் அவர்பாராளுமன்றத்தில் கேள்விக்குட்படுத்தினார்.
“123,000க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் இருந்தும் அரசாங்கம் ஏன்
ஒத்துழைக்கவில்லை?” 500க்கும் மேற்பட்ட சாட்சிகள் மற்றும் 123,000க்கும்
அதிகமான ஆதாரங்களை உள்ளடக்கிய களஞ்சியம் ஐ.நா. மனித உரிமைகள்
ஆணைக்குழுவிடம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படும் நிலையில், அந்த
அமைப்புடன் ஈடுபட அரசாங்கம் மறுத்துள்ளமை தொடர்பிலும் சாணக்கியன்
கேள்வியெழுப்பினார்.
“பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு அரசாங்கம்
உறுதிபூண்டுள்ளதாக கூறும் நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன்ஈடுபடுவதற்கான மறுப்பு எவ்வாறு அந்த உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது?”என அவர் கேள்வியெழுப்பினார்.
மோதலுக்குப் பின்னரான பொறுப்புக்கூறல், காணாமல் ஆக்கப்பட்டோர், செம்மணிமனிதப் புதைகுழி, காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டம், மாகாணசபைத் தேர்தல் மற்றும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட முக்கியமான விடயங்களில்அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் தெரிவிக்கும் நிலைப்பாடுகளுக்கும்,பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான இடைவெளியைஅரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே தனது கேள்விகளின் நோக்கம் எனசாணக்கியன் வலியுறுத்தினார்

No comments: