
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்குச் சொந்தமான நிதிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், சர்வதேச காவல்துறையின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்காக, சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பிடியாணையைப் பிறப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2014-ஆம் ஆண்டில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 7.8 மில்லியன், அப்பணியகத்தின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
குறித்த நிதி பயன்பாடு தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: