
பிக்குகளின் பாதயாத்திரையானது தற்போது ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கிப் பயணித்த பாதயாத்திரை, தற்போது ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் செல்லும் வகையில் தமது பயணத் திட்டத்தை மாற்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தெமட்டகொடை சந்தி வரை சென்றடைந்த இந்தப் பாதயாத்திரை, தற்போது மாளிகாவத்தை நோக்கிப் பயணித்து வருவதாகவும், அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
No comments: