(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரச அதிகாரிகளுக்கான மனோஹரி மொடியூல் பயிற்சி நெறியின் கீழ், மன நலம் சம்பந்தப்பட்ட செயலமர்வு இடம்பெற்றது.
உலக மனநல தினத்தை முன்னிட்டு இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட உளநல மருத்துவ நிபுணரும் மனோஹரி மொடியூலின் ஸ்தாபகருமான வைத்தியர் எம். கணேசன் வளவாளராகக் கலந்து கொண்டு செயலமர்வை நடத்தினார்.
இதன்போது சமூக மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளை உதாரணங்களுடன் விளக்கி அனுபவப் பகிர்வின் மூலம் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.
சமூக மட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் சவால்களையும் சுமுகமாகக் கையாள்வதற்கேற்ற ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வளவாளரால் வழங்கப்பட்டது.
மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இச்செயலமர்வில் மாவட்ட உதவிச் செயலாளர் ஜி. பிரணவன், மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின திட்ட முகாமையாளர் புஷ்பராணி பிகுறாடோ உட்பட அரச அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம், கடந்த 2023ஆம் ஆண்டு தொடக்கம் மாவட்டச் செயலகத்துடன் இணைந்து அரச உத்தியோகத்தர்களுக்கு மனோஹரி மொடியூல் பயிற்சிகளை வழங்கி வருகின்றது.
.jpeg)

No comments: