(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
அரச சேவையிலுள்ள அலுவலர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னரான ஓய்வூதியம் பெறுவதற்குரிய ஆவணங்களைத் தயார்படுத்தி முன்னாயத்தமாக இருத்தல் பற்றிய தெளிவுபடுத்தல் மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
முதியோருக்கான தேசிய செயலகத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்த தெளிவூட்டல் நிகழ்வில், அடுத்து வரும் ஆண்டுகளில் ஓய்வு பெறவிருக்கும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தெளிவூட்டல் நிகழ்வில் ஓய்வுக்குப் பின்னரான வாழ்க்கையைத் திட்டமிடுதல், முதுமைக் காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள், வெற்றிகரமான முதுமை வாழ்வுக்குத் தேவையான தயார்படுத்தல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
சிரேஷ்ட உளவியல் உதவியாளர் கே. புவனேந்திரன் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரதேச உதவிச் செயலாளர் எச்.எம். முஹம்மது பாரூக் ஆகியோர் நிகழ்வில் வளவாளர்களாகக் கலந்து கொண்டு நேர்த்தியாக ஓய்வூதியம் பெறுதலுக்கான முன்னாயத்த நடவடிக்கைகள்பற்றி தெளிவூட்டல்களை வழங்கினர்.


No comments: