News Just In

10/15/2026 05:33:00 PM

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட இரு யாழ். இளைஞர்கள்: மறைக்கப்பட்ட வதைமுகாமின் கொடூரங்கள்

மட்டக்களப்பில் கடத்தப்பட்டஇரு  யாழ். இளைஞர்கள்: மறைக்கப்பட்ட வதைமுகாமின் கொடூரங்கள்


2008 ஒக்டோபர் 3ஆம் திகதி மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வராசா குணசீலன் மற்றும் கந்தசாமி குகதாஸ் ஆகிய இரு இளைஞர்களும் வெள்ளை வானில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் இன்றளவும் கேள்விகள் எழுகின்றன.

குறித்த நாளில் இருந்து ஐந்து நாட்களுக்குப் பின்னர், ஒக்டோபர் 9ஆம் திகதி, அவர்களது சடலங்கள் காத்தான்குடி பாலமுனைக் கடற்கரையில் சிதைந்த நிலையில் கரையொதுங்கின.

முன்னாள் புலனாய்வுப் பிரிவு உளவாளி ஒருவர் வழங்கியதாகக் கூறப்படும் சாட்சியத்தின்படி, குறித்த இளைஞர்கள் காத்தான்குடி பகுதியில் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாக கடந்த காலங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டும் இருந்தன.

18 ஆண்டுகளாக மர்மமாக நீடிக்கும் இந்த இரட்டைப் படுகொலை தொடர்பில் இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என சமூக ஆர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

No comments: