நூருல் ஹுதா உமர்
கலாசாரத் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்படும் “பிரதீபா” மாகாண மட்டக் கலாசாரப் போட்டியில், கல்முனை ஸாஹிரா கல்லூரி அணி முதலிடங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் கிராமியப் பாடல், புத்தாக்க நடனம் – ரபான், தனிநபர் நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதலிடங்களைப் பெற்றுள்ளனர்.
அத்துடன், ஆசிரியர்களுக்கான நடனப் போட்டியிலும் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஐ.எம். அமீர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
மாணவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இவ்வெற்றிகள், கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளன.
வெற்றிபெற்ற மாணவர்களையும், அவர்களை வழிநடத்திப் பயிற்சியளித்த ஆசிரியர்களையும், ஆசிரியர்களுக்கான போட்டியில் முதலிடம் பெற்ற சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஐ.எம். அமீரையும் கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் பாராட்டி வாழ்த்தியுள்ளது.
மாகாண மட்டத்தில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளில் திறமையை வெளிப்படுத்தி முதலிடங்களைப் பெற்றுள்ள இச்சாதனை, மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்துவதிலும் பாடசாலையின் நற்பெயரை உயர்த்துவதிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

No comments: