இன்றைய வானிலை
இலங்கைக்கு அண்மையில் வங்காள விரிகுடாவில் வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற அதிகரித்த மழைவீழ்ச்சி தொடரக்கூடும். அத்துடன் வானம் முகில் செறிந்து காணப்படும்.
வடக்கு , கிழக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இலங்கைக்கு மேலாக வங்காள விரிகுடாவில் தென்படுகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களில் மழையுடனான வானிலை தொடரக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 70 km வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
10/14/2026 08:56:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

No comments: