News Just In

10/21/2026 04:38:00 PM

மெக்கா பள்ளிவாசலில் முத்தமிட்டதற்காக வங்கதேசத்தினரை ரகசியமாக தூக்கிலிட்ட சவுதி அரசு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம்

மெக்கா பள்ளிவாசலில் முத்தமிட்டதற்காக வங்கதேசத்தினரை ரகசியமாக தூக்கிலிட்ட சவுதி அரசுமனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம்



 சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பள்ளிவாசலில் முத்​தமிட்டு ஒழுக்​கக்​கேடான செயலில் ஈடுபட்டதாக 2 வங்கதேச தொழிலா​ளர்​கள் தூக்​கி​லிடப்​பட்ட விவகாரம் உலக அளவில் கொந்​தளிப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சவுதி அரேபியாவின் மெக்கா பள்​ளிவாசலுக்​குள் ஒழுக்​கக்​கேடான செயல்​களில் ஈடு​பட்​ட​தாகக் கூறி நஸ்​ருல் இஸ்​லாம் அப்துல் பசீர், சிட்டி அக்​தர் ஆகிய இரு வங்​கதேச நாட்​டினருக்கு கடந்த 14ம் தேதி மரண தண்​டனை நிறைவேற்​றப்​பட்​ட​தாக அங்குள்ள ஊடகங்​கள் செய்தி வெளி​யிட்​டன.

நஸ்ருலின் தந்தை கூறுகை​யில், “எனது மக​னுக்கு சரியான நீதி விசா​ரணை வழங்​கப்​பட​வில்லை. நியாயமின்றி என் மகன் கொல்லப்​பட்​டிருந்​தால் எனக்கு நீதி வேண்​டும்” எனக் கண்ணீருடன் தெரி​வித்​துள்​ளார். இரு​வரும் தம்​ப​தி​கள் என்​றும், பள்​ளிவாசலுக்​குள் கணவன் மனைவி நெற்​றி​யில் முத்தமிட்டதற்காகவே இந்​தத் தண்​டனை வழங்​கப்​பட்​ட​தாகவும் ஒரு தரப்​பினர் கூறுகின்​றனர்.

ஆனால், நைஜீரியாவைச் சேர்ந்த பிரபல பதிவர் எம்.சி. அல்​ஹாஜி, “நானும் எனது மனைவியும் மெக்கா பள்​ளிவாசல் அரு​கில் பலமுறை அன்​பைப் வெளிப்​படுத்​தி​யிருக்​கிறோம். நெற்​றி​யில் முத்​தமிட்​டதற்​காக மரண தண்​டனை வழங்​கப்​பட்​டது என்​பது முற்​றி​லும் இணை​யத்​தில் பரப்​பப்​படும் வதந்​தி​. சவுதி அரசு அவர்​கள் செய்த உண்​மையான குற்​றம் என்ன என்​பதை வெளிப்​படை​யாக அறி​விக்​காததே குழப்​பங்​களுக்​கு் காரணம்” என்று பதிவிட்​டுள்​ளார்.

வங்​கதேச வெளி​யுறவு் இணை​யமைச்​சர் ஷாமா ஒபாயித் இஸ்லாம் கூறுகை​யில்,“மரண தண்​டனை குறித்து எந்த தகவலும் சவுதி வழங்​க​வில்லை. ஊடகங்​கள் மூலமாகவே அறிந்து கொண்டோம்” என்றார்.

இதுகுறித்து சவுதி தூதரை நேரில் வரவழைத்து வங்​கதேச வெளியுறவு அமைச்​சகம் விளக்​கம் கேட்டுள்​ளது. சவுதி அரசின் இந்த நட​வடிக்கை மனித உரிமை செயற்​பாட்​டாளர்​களாலும், வங்​கதேச மக்​களாலும் கடுமையாக விமர்​சிக்​கப்​பட்டு வரு​கிறது

No comments: