News Just In

10/12/2026 04:11:00 PM

கிழக்கு மாகாண எல்லே மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள், மகளிர் அணிகள் சம்பியன்

கிழக்கு மாகாண எல்லே மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள், மகளிர் அணிகள் சம்பியன்.


(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

50ஆவது தேசிய விளையாட்டு விழாவிற்கு முன்னோடியாக நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு விழாவின் எல்லே போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழக மகளிர் அணி, திருகோணமலை மாவட்ட அணியை தோற்கடித்து கிழக்கு மாகாண சம்பியனானது.

ஒரு இன்னிங்ஸ் மற்றும் 02 ஓட்டங்களால் அவ்வணி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.

ஆண்கள் பிரிவின் அம்பாறை மாவட்ட அணியை 02 ஓட்டங்களால் தோற்கடித்து மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய களுவன்கேணி பாரதி விளையாட்டுக் கழக அணி, கிழக்கு மாகாண சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது.

50ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு விழாவின் எல்லே போட்டிகள், சனிக்கிழமை (10) திருகோணமலை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.

இச்சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. மகளிர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

No comments: