தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நாளை (13) குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிவித்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று (12) காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்பரப்புகளில் வடகிழக்குத் திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதுடன், அதன் வேகம் மணித்தியாலத்துக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்பயணிகள் விசேட அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (11) மீண்டும் புதுப்பித்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (12) மாலை 4 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை மாவட்டத்தின் எல்ல மற்றும் பசறை, களுத்துறை மாவட்டத்தின் வலல்லவிட மற்றும் புலத்சிங்கள ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் தும்பனை, யட்டிநுவர, ஹதரலியத்தை மற்றும் தொலுவ ஆகிய பிரதேசங்களும் எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்டை, ரம்புக்கனை, கேகாலை மற்றும் வரக்காபொல ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம, மல்லவப்பிட்டிய மற்றும் அலவ்வ பகுதிகளுக்கும், மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை, ரத்தொட்ட மற்றும் அம்பங்கங்கை கோறளை ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, நிவித்திகலை, அயகம, குருவிட்டை, வெளிபொல, எஹலியகொட, கலவானை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளும் எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு அபாயம் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
களு கங்கை ஆற்றின் மேல் நீரேந்து பகுதிகளில் பெய்யும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, கீழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன.
நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பின்படி,
இன்று (12) காலை நிலவரப்படி மில்லகந்த நீர்மட்ட அளவீட்டு நிலையத்தில் நீர்மட்டம் 5 மீற்றரைத் தாண்டியுள்ளது.
இதனால், களு கங்கை ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

No comments: