மின்னல் தாக்கி கிறிஸ்தவ மதகுரு பலி
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்ரன் தோட்டத்தில் மின்னல் தாக்கியதில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் சுமார் 50 வயதுடைய கிறிஸ்தவ மதகுரு என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த போதிலும், உடனடியாக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது சடலம் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10/04/2026 01:02:00 PM
மின்னல் தாக்கி கிறிஸ்தவ மதகுரு பலி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: