News Just In

8/07/2026 11:48:00 AM

சற்றுமுன்னர் பல்லன்சேன சிறைச்சாலையிலும் பதற்றம்! பொலிஸார் குவிப்பு

சற்றுமுன்னர் பல்லன்சேன சிறைச்சாலையிலும் பதற்றம்! பொலிஸார் குவிப்பு



நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு பல பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து இன்று காலை முதல் (07) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: