News Just In

8/03/2026 11:27:00 AM

மூதூரில் சோகம்: பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் விபத்தில் உயிரிழப்பு

மூதூரில் சோகம்: பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் விபத்தில் உயிரிழப்பு



திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (02) மாலை திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மூதூர், கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தமிழ் செல்வன் தனேஸ் மற்றும் 19 வயதுடைய அருணவன் செல்வரெத்தினம் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குப் பின்னர் ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




No comments: