News Just In

8/09/2026 10:41:00 AM

அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்

அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள்-ஆதாரங்களுடன்நெருங்கும்புலனாய்வாளர்கள்


முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட ஏறக்குறைய ஐம்பது அரச உயர் அதிகாரிகள் இந்த வருட இறுதிக்குள் கைது செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளால் நாடு இழந்த பணத்தின் தொகை 5000 கோடி ரூபாவிற்கும் அதிகம் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் உட்பட கிட்டத்தட்ட இருபது அரசியல்வாதிகள் பல்வேறு தண்டனைகளைப் பெற்று சிறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு புலனாய்வுத்திணைக்களங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை கண்காணிக்க சிறப்பு உளவுக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.​​

நாட்டில் பொதுச்சொத்துக்களை வீணடித்த அரசியல்வாதிகள் மற்றும் ஏனையவர்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளை சுட்டிக்காட்டி சில வழக்குகளில் இருந்து தப்பிய பல அரசியல்வாதிகள் குறித்த தகவல் வெளியாகி, தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து மீண்டும் வழக்குப்பதிவு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

எதிர்வரும் முக்கியமான தேர்தலுக்கு முன்னர் இந்த விசாரணைகளை முடிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது

No comments: