News Just In

6/30/2026 06:12:00 AM

சட்டம் - ஒழுங்கில் சுதந்திரமாக செயல்படுங்கள்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

சட்டம் - ஒழுங்கில் சுதந்திரமாக செயல்படுங்கள்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் விஜய் அறிவுறுத்தல்



சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு 

சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினை​களில் அதி​காரி​கள் சுதந்​திர​மாக முடிவு செய்​ய​லாம். எதி​லும் தனி​நபர்​கள் தலை​யீடு இருக்​காது. யார் தவறு செய்​தா​லும் பாரபட்​சமின்றி துரித​மாக நடவடிக்கை எடுத்து தண்​டனை பெற்​றுத் தரவேண்​டும் என்று ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாட்​டில் முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

தமிழகத்​தின் சட்​டம் - ஒழுங்கு நில​வரம், அரசுத் திட்​டங்​களின் செயல்​பாடு​கள் குறித்து ஆண்​டு​தோறும் முதல்​வர் தலை​மை​யில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அலு​வலர்​கள் மாநாடு நடை​பெறும். அந்த வகை​யில், புதி​தாக ஆட்​சிப் பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசின் முதலா​வது மாவட்ட ஆட்​சி​யர்​கள், காவல் துறை, வனத் துறை அலு​வலர்​களின் 2 நாள் மாநாடு சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று தொடங்​கியது.

மாநாட்​டுக்கு முதல்​வர் விஜய் தலைமை வகித்​தார். இதில் அனைத்து துறை​களின் அமைச்​சர்​கள், செயலர்​கள், மாவட்ட ஆட்​சி​யர்​கள், காவல் கண்​காணிப்​பாளர்​கள் மற்​றும் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். மாவட்ட நிர்​வாகம், சட்​டம் - ஒழுங்கு நிலை உட்பட பல்​வேறு முக்​கிய விஷ​யங்​கள் குறித்து ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது. மாநாட்​டில் முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: லஞ்​சம், ஊழல் இல்​லாத, வெளிப்​படை​யான, நேர்​மை​யான, சமூக நீதிக்​கான ஆட்​சிக்​காக நமது அரசை மக்​கள் தேர்ந்​தெடுத்​துள்​ளனர். சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினை​களில் நீங்​கள் சுதந்​திரமாக முடிவு செய்​ய​லாம். தவறு செய்​தவர்​கள் யாராக இருந்​தா​லும் பாரபட்​சமின்றி சட்​டப்​படி துரித​மாக நடவடிக்கை எடுத்து உரிய தண்​டனை பெற்​றுத் தர வேண்​டும். அதே​நேரம், நிரப​ரா​தி​கள் பாதிக்​கப்​படக் கூடாது.

ஆட்​சி​யர்​கள் ஒவ்​வொரு மாத​மும் சட்​டம் - ஒழுங்கு கூட்​டத்தை நடத்​தி, சம்​பந்​தப்​பட்ட துறை​களை ஒருங்​கிணைத்து செயல்பட வேண்​டும். வரு​வாய் மற்​றும் காவல் துறை​யினரோடு கலந்​துபேசி, எந்த ஒரு நிகழ்​வும் நடப்​ப​தற்கு முன்​ன​தாகவே மூல​காரணத்​தை கண்​டறிந்து, குற்​றங்​களை தடுக்க வேண்​டும்.

பெண்​கள், குழந்​தைகள் பாது​காப்பை 100 சதவீதம் உறு​தி​செய்ய வேண்​டும். ஒவ்​வொரு பள்​ளிக்​கும் அரு​கில் உள்ள கடைகளை தொடர்ச்​சி​யாக கண்​காணிக்க வேண்​டும். போதைப் பொருட்​கள் தொடர்​பான குற்​றங்​களில் ஈடு​படு​வோரை உடனே கைது செய்ய வேண்​டும்.

ஆய்​வுக்​காக அரசு அலு​வல​கங்​களுக்கு வரும் மாவட்ட அமைச்​சர்​கள், எம்​எல்​ஏக்​களுக்கு ஒத்​துழைப்பு தர வேண்​டும். அரசுத் திட்​டங்​கள் எவ்வாறு செயல்​படுத்​தப்​படு​கின்றன என்​பதை அதி​காரி​கள் நேரடி​யாக சென்று ஆய்வு செய்ய வேண்​டும்.

அரசு அலு​வலர்​கள் சட்ட விதி​களுக்கு உட்​பட்டு சுதந்​திர​மாக செயல்​படலாம். எதி​லும் தனி​நபர்​களின் தலை​யீடு இருக்​காது. சாதி அடிப்​படையி​லான பாகு​பாடு, வன்​முறை​களுக்கு எதி​ராக உறு​தி​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும். கோயில் திரு​விழாக்​கள், அரசி​யல் பேரணி​கள், பொது நிகழ்​வு​களில் நெரிசல் ஏற்படாமல் தடுக்​க வேண்​டும்.

ஊரகப் பகு​தி​களில் நடை​பெறும் பெரும்​பாலான மோதல், கொலை சம்​பவங்​களுக்கு நிலத் தகராறுகளே முதன்​மைக் காரண​மாக உள்​ளன. மாவட்ட அளவி​லான நில வழக்கு தீர்​வுக் குழு சீரமைக்​கப்​பட்டு 2 வார இடைவெளி​யில் கூட்ட வேண்​டும். ஆட்​சி​யர், எஸ்​.பி.மாதம்​தோறும் மதிப்​பாய்வு நடத்​தி, செயல் திறனை மதிப்​பிட வேண்​டும். பெண்​களுக்கு பாது​காப்​பற்ற பகு​தி​கள், குற்​றம் அதி​கரித்த இடங்​கள், விபத்​துகள் அதி​கம் நிகழும் பாதைகள், மூத்த குடிமக்​கள் அதி​கம் வந்​துசெல்​லும் பகு​தி​களில் கண்​காணிப்பு கேமரா பொருத்த வேண்​டும்.

பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள், போக்சோ வழக்​கு​களில் எஃப்​ஐஆர் பதி​வில் தாமதம் ஏற்​படக் கூடாது. கள்​ளச் சாரா​யத்தை தடுக்க, காவல், வரு​வாய், வனத் துறை அதி​காரி​கள் மலைப் பகு​தி​களில் சட்​ட​விரோத வடிகட்​டல் இடங்​கள் பற்​றிய தகவலை சேகரிக்க வேண்​டும். சுகா​தா​ரத் துறை சார்​பில் அனைத்து மாவட்​டங்​களி​லும் போதை முறிவு முகாம்​கள் நடத்த வேண்​டும்.

எல்​லை​யோர மாவட்​டங்​கள் வழி​யாக போதைப் பொருட்​கள் கடத்​தப்​படு​கிற​தா, உரிய அனு​ம​தி​யின்றி கனிம வளங்​கள் கடத்​தப்​படு​கிறதா என்று தீவிர​மாக கண்​காணித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். சென்​னை, கோவை, திருப்​பூர் போன்ற தொழில் துறை மண்​டலங்​களில் புலம்​பெயர்ந்த தொழிலா​ளர்​களிடம் குட்கா மற்​றும் பிற போதைப் பொருள்​களின் பரவலை தீவிர​மாக கண்​காணிக்க வேண்​டும்.

காவிரி, வைகை மற்​றும் பிற ஆற்று மணல் படு​கை​களில் சட்ட விரோத மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்​டும். பட்​டாசு, ரசாயனத் தொழிற்​சாலைகளில் தொழில் துறை பாது​காப்பு நடை​முறை​கள் கண்​டிப்​பாக அமல்​படுத்​தப்பட வேண்​டும்.

No comments: