பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக்கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி, அவரை சாதாரண சிறைச்சாலைக்கு மாற்றுவதற்காக அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த விசாரணையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமாக பணியாற்றிய சாகல ரத்நாயக்கவும் சிக்கியுள்ளார்.
விசாரணையின் போது, ஹேரத் முதியான்சேலாகே கொனகெதர நிர்மாண இந்திரஜித் பண்டார எனப்படும் ஹெர்பி என்பவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தனது வாக்குமூலத்தின் ஒரு பகுதியில், இது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார்.
“நான் டுபாயில் ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க ஆகியோரை சந்தித்த போது, இந்த வேலையைச் செய்யும் விதம் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் இருவரும், “நாங்கள் ஏற்கனவே சிந்தகவை கொலை செய்வதைத் தடுத்து அவருக்கு உயிர் பிச்சை கொடுத்துள்ளோம். அதற்கு நிச்சயமாக 500 லட்சம் ரூபாவை தேசபந்து தென்னகோனுக்கு வழங்க வேண்டும் ” என கூறினார்கள்.
அதேபோல் மூன்று மாதங்களுக்குள் சிந்தகவின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்க வேண்டும், அதற்கு ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு 500 லட்சம் ரூபாவை வழங்க வேண்டும். அவர் நேரடியாக பணம் வாங்க மாட்டார், நாங்கள் அதை வேறு வழியில் செய்ய வேண்டும். சாகல ரத்நாயக்க மூலமாவது நாங்கள் அந்த வேலையைச் செய்து முடிப்போம்” என தெரிவித்ததாக ஹெர்பி கூறியுள்ளார்.
இந்த வாக்குமூலம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: