News Just In

6/20/2026 03:46:00 PM

தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலையில் ராஜபக்சர்களுக்கு தொடர்பு! புலனாய்வு இணையத்தளம் ஒன்றின் பரபரப்பு செய்தி..

தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலையில் ராஜபக்சர்களுக்கு தொடர்பு! புலனாய்வு இணையத்தளம் ஒன்றின் பரபரப்பு செய்தி..



தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொல்லப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதன் மர்மங்கள் அவிழ்க்கப்படாத நிலையில் லண்டனை தளமாக கொண்டியங்கும் புலனாய்வு இணைத்தளமான ஐஓடிபிபி (IODPP Police) திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ராஜபக்சர்களில் ஒருவரே இந்த கொலையை செய்ததாக குறித்த இணையத்தளம் சர்சையை கிளப்பியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் நண்பரான சந்திரா ஷாப்டரின் மகன் தான் தினேஷ் ஷாப்டர் (Dinesh Shafter). அவர் ஒரு பிரித்தானியப் பிரஜையாவார்.

மிகவும் நம்பகமான தகவலை உறுதிப்படுத்திய பின்னரே, நான் இதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துகிறேன் என்று இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்த பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால ஐஓடிபிபி (IODPP Police) வாயிலாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தக் கொலை தொடர்பில் சி.ஐ.டி (CID) இன் டி.ஐ.ஜி (DIG) பிரசாத் ரணசிங்கவுடன் இணைந்து விசாரிக்க, ராஜபக்ச விசுவாசியான பிரசாந்த என்ற எஸ்.எஸ்.பி (SSP Prasantha) நியமிக்கப்பட்டார்.

அவர்தான் இந்த விசாரணைகளைச் செய்தார். இந்த விசாரணையின்போது தினேஷ் ஷாப்டரின் மரணத்தைத் தற்கொலை என்று பிரசாத் ரணசிங்க போன்றவர்கள் கூறினார்கள்.

கொழும்பில் எந்தவொரு கொலையையும் தற்கொலையாக மாற்றக்கூடிய ஒரு ஜே.எம்.ஓ (JMO) இருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை அவர் இரண்டு முறை பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேவைக்கு வந்தவர்.

மேல் நீதிமன்றத்தில் கடுமையான கண்டனத்துக்கு உள்ளான ஒரு ஜே.எம்.ஓ தான் அவர். இந்த மரண பரிசோதகரை வைத்து இந்த கொலையை தற்கொலையாக மாற்றியிருக்க வாய்ப்புள்ளது. இதன்போது, ஷாப்டர் குடும்பத்திற்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையானார்
.



அவரின் கோரிக்கையை அடுத்து ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு இது தற்கொலை அல்ல, ஒரு கொலை என்பதை நாட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் வெளிப்படுத்தினார்கள்.

ஆனால், பிரசாத் ரணசிங்க இந்த வழக்கை மூடிமறைத்தார். ராஜபக்சக்களில் ஒருவர் இரண்டு பில்லியன் (2 Billion) ரூபாய்க்காகத்தான் தினேஷ் ஷாப்டரைக் கொலை செய்துள்ளனர்.

வாகனத்தின் பின் இருக்கைக்குச் சென்றுதான் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்கள். எனவே, இந்த கொலை குறித்த விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: