தவெக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும், தேர்தல் முடிவுகளில் அக்கட்சி பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என்றும் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 1967-ல் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றவுடன் கோவை சிதம்பரம் பூங்காவில் மே தினத்தை கொண்டாடி அரசு விடுமுறை என அறிவித்தார்.
மத்திய அரசு மே தினத்தை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று நான் 1990-ம் ஆண்டு ஏப்.30-ம் தேதி மாநிலங்களவையில் குரல் எழுப்பினேன். இந்த கோரிக்கையை கம்யூனிஸ்ட், ஜனதா தள உறுப்பினர்கள் ஆதரித்தனர்.
உடனே பிரதமரை சந்தித்து அன்றையே தினமே அதை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். இதையடுத்து அன்று ராம் விலாஸ் பஸ்வான் இரு அவைகளிலும் அறிவித்தார். மோடி அரசு தொழிலாளர்களை நசுக்கி முதலாளித்துவத்துக்கு ஆதரவாக, முதலாளிகளின் பிரதிநிதிகளாக செயல்படுகிறது.
தொழிலாளர்கள் உரிமைகள் நசுக்கப்படுவதை எதிர்த்தும், உரிமைகளுக்காகவும் போராடுகிறார்கள். நாங்களும் அவர்களுக்காக போராடுவோம்.
அதிகமான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணி தான் வெல்லும் என்கிறார்கள். ஒரு கருத்துக் கணிப்பு அதிமுகவுக்கும், மற்றொன்று தவெகவுக்கும் சாதகமாக வந்துள்ளன.
மே 4-ம் தேதி வாக்கு எண்ணும் போது உன்மை நிலவரம் தெரியவரும். என்னுடைய கருத்து திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும், திமுக ஆட்சியமைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறேன்.
தவெக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும், தேர்தல் முடிவுகளில் தவெக பல ஆச்சரியங்களை ஏற்படுத்தலாம். மாணவர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் தவெகவுக்கு அதிக ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது.
திராவிட இயக்கம் பல தியாகங்கள் மற்றும் துன்பங்களின் மேல் கட்டப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த இயக்கத்தை வளர்க்க உயிர் தியாகம் செய்துள்ளனர். தேர்தலில் வெற்றியோ தோல்வியோ திராவிட இயக்கம் இந்த மண்ணில் நிரந்தரமாக இருக்கும்.
பாஜக நினைப்பது போல் அதை அசைத்து பார்க்க முடியாது. பல மாநிலங்களில் பாஜக ஊடுருவ நினைக்கிறது.
கேரளாவில் அது சாத்தியமில்லை, மேற்கு வங்கத்தில் நிலைமை மாறலாம். நாம் பாஜக மற்றும் ஹிந்துத்துவ அராஜகத்தை எதிர்க்க வேண்டும். மேலும் இது குறித்து இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
தற்போது அது நடப்பதில்லை. இனி இளைய தலைமுறை, மாணவர்கள் மத்தியில் இதை கொண்டு சேர்ப்பதே திராவிட இயக்கத்தின் தேவையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

No comments: