News Just In

5/20/2026 10:53:00 AM

வீரவன்சவை கைது செய்ய அநுர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

வீரவன்சவை கைது செய்ய அநுர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள போர் நினைவிடத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பாக, விமல் வீரவங்சவுக்கு எதிராக இன்று பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வீரவங்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

நேற்று முன்தினம் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினர் நினைவிடத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்தபோது, பொலிஸார் அவர்களை நினைவிடத்திற்கு அருகில் செல்ல அனுமதிக்காமல் தடுத்துள்ளனர்.

இதன்போது அந்தப் பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதுடன், வார்த்தை பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

இதன்போது, பொலிஸ் அதிகாரிகளைத் தள்ளிக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வீரவங்ச முயன்றபோது, அவர் தரையில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: