News Just In

4/25/2026 10:42:00 AM

பிரச்சாரத்தின்போது புறாவுக்கு தவெக வண்ணம்: விஜய்க்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு


பிரச்சாரத்தின்போது புறாவுக்கு தவெக வண்ணம்: விஜய்க்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு



தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது புறாவுக்கு தவெக வண்​ணம் பூசப்​பட்டு பறக்​க​விடப்​பட்ட விவ​காரத்​தில் கட்​சி​யின் தலை​வர் விஜய்க்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது.

திருச்​சி​யில் ஏப்​.19-ம் தேதி தவெக தலை​வர் விஜய் மேற்​கொண்ட பிரச்​சா​ரத்​தின் போது, தவெக கட்​சி​யின் வண்​ணம் பூசப்​பட்ட புறா பறக்​க​விடப்​பட்​டது. இது தொடர்​பாக பீட்டா இந்​தியா அமைப்பு கட்​சி​யின் தலை​வர் விஜய்க்கு கடிதம் ஒன்றை அனுப்​பி​யுள்​ளது.

அந்த கடிதத்​தில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: சமீபத்​தில் தவெக கட்​சிப் பிரச்​சா​ரத்​தில் புறாவுக்கு வண்​ணம் பூசப்​பட்டு பறக்​க​விட்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

வண்​ணம் பூசப்​பட்ட புறா, இரைச்​சலான மற்​றும் கூட்ட நெரிசலான சூழலில் விடுவிக்​கப்​படு​வது அந்​தப் பறவை​களுக்​குக் கடுமை​யான மன அழுத்​தத்​தை​யும், உடல் ரீதி​யான காயங்​களை​யும், நீண்​ட​கால பாதிப்​பு​களை​யும் ஏற்​படுத்​துகிறது.

பறவை​களின் இறகு​களில் பூசப்​படும் பெயின்ட் அல்​லது சாயங்​கள், அவற்​றின் வெப்ப ஒழுங்​கு​முறை மற்​றும் பறக்​கும் திறனைப் பாதிப்​ப​தோடு, அவை தங்​களைச் சுத்​தம் செய்​யும் போது அந்த நச்​சுப் பொருட்​களை உட்​கொள்​ள​வும் வாய்ப்​புள்​ளது.

இந்​தச் செயல் விலங்​கு​கள் மீதான கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் கடுமை​யான விதி​மீறலாகும். மேலும் இது தேர்​தல் பிரச்​சா​ரத்​தின் போது விலங்​கு​களைப் பயன்​படுத்​தக்​கூ​டாது என்ற இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யத்​தின் ஆலோ​சனையை மீறு​வ​தாக​வும் உள்​ளது.

இந்த விவ​காரத்​தில் தவெக தலை​வர் விஜய் உடனடி​யாகத் தலை​யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்​டும். குறிப்​பாக, வண்​ணம் பூசப்​பட்டு பயன்​படுத்​தப்​பட்ட அந்​தப் பறவை​களை, உரிய சிகிச்சை மற்​றும் மறு​வாழ்வு அளிப்​ப​தற்​காக உடனடி​யாகப் பீட்​டா​விடம் ஒப்​படைக்க வேண்​டும்.

தேர்​தல் பிரச்​சா​ரங்​களில் விலங்​கு​களைப் பயன்​படுத்​து​வதை முற்​றி​லும் தடை செய்​யும் வகை​யில் ஓர் உறு​தி​யான கொள்​கையை வகுக்க வேண்​டும்.

கட்​சி​யின் தொண்​டர்​கள் மற்​றும் அலு​வல​கப் பணி​யாளர்​களுக்கு விலங்​கு​கள் பாது​காப்பு குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டும்.

சட்​டம் மற்​றும் விலங்​கு​களின் நலனைக் கருத்​தில் கொண்​டு, தனது தலை​மைத்​து​வத்​தின் கீழ் இத்​தகைய தவறான செயல்​களைத் தடுத்து நிறுத்த விஜய் நடவடிக்கை வேண்​டும். இவ்​வாறு அந்த கடிதத்தில்​ கூறப்​பட்​டுள்​ளது.

No comments: