News Just In

4/20/2026 11:17:00 AM

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் பலி!

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் பலி!



காலி - பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் ஏனைய நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த துயரம் நேர்ந்துள்ளது.

இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பெந்தொட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

No comments: