கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ஸஹிரியன் Y2K அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு 02.03.2026 ஆம் திகதி தலைவர் எம்.எச்.எம்.ஹனீப் அவர்களின் தலைமையில் கல்முனை கடற்கரை இல்ல உணவகத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைப்பின் பிரதி தலைவர்களான எஸ்.எம்.நௌசாத், எம்.பி.எம்.நௌசாத், செயலாளர் ஏ.எம். ஜலீல், அமைப்பாளர் எம்.வை.எம்.நயீம் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பல நண்பர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நண்பர்கள் ஒன்றுகூடிய இந்நிகழ்வு, சகோதரத்துவ உணர்வையும் பழைய நினைவுகளையும் மீட்டெடுத்ததுடன், சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தியது.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக கல்முனை ஹக் பள்ளிவாசலின் பேஷ் இமாம் அல் ஹாபில் அல் ஆலிம் ஏ.ஜே.எம். சப்றாஸ் (சஹ்தி) அவர்கள் சன்மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ரமழான் மாதத்தின் ஆன்மீக முக்கியத்துவம், சகிப்புத்தன்மை, தர்மம் மற்றும் சமூக பொறுப்புணர்வு குறித்து வலியுறுத்தினார்.
No comments: