News Just In

3/20/2026 11:20:00 AM

சாய்ந்தமருது பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் செயற்திட்ட கலந்துரையாடல்!

சாய்ந்தமருது பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் செயற்திட்ட கலந்துரையாடல்!

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது இளம் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு (UGAS) ஏற்பாடு செய்த வருடாந்த இஃப்தார் நிகழ்வும் செயற்திட்ட கலந்துரையாடலும் சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம். ஜப்ரான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளைஞர் சேவை மன்ற மாகாண பணிப்பாளர் ஏ.ஹமீர், ஆலோசனை சபை உறுப்பினர்களான பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், வைத்தியர் சனூஸ் காரியப்பர், அதிபர் எம்.சி.நஸ்லின் ரிப்கா மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ சேவை உதவியாளர் எம்.ஐ.எம். சர்ஜூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இளைஞர் சேவை அதிகாரிகள், உலமாக்கள், கல்விமான்கள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பகுதிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பகுதிகளில் கல்வி அபிவிருத்தி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கல் மற்றும் எதிர்கால செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு சமூக ஒற்றுமையையும் இளைஞர் முன்னேற்றத்தையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

No comments: