News Just In

3/21/2026 08:54:00 AM

அனுமதிப்பத்திரமின்றி பெட்ரோல் வைத்திருந்த இருவர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி பெட்ரோல் வைத்திருந்த இருவர் கைது!


நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 50 ஏக்கர் மற்றும் தளுபொத்த பகுதிகளில், உரிய அனுமதிப்பத்திரமின்றி பெட்ரோல் வைத்திருந்த சந்தேகநபர்கள் இருவர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை  மாலை, நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த 18 லீட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும் 50 ஏக்கர் மற்றும் தளுபொத்த பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: