News Just In

2/23/2026 11:27:00 AM

மீண்டும் 4 இலட்சத்தை தொட்ட தங்கத்தின் விலை; இலங்கையில் இன்றைய விலை நிலவரம்

மீண்டும் 4 இலட்சத்தை தொட்ட தங்கத்தின் விலை; இலங்கையில் இன்றைய விலை நிலவரம்




இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கமைய உள்நாட்டுச் சந்தையிலும் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

No comments: