News Just In

1/13/2026 11:54:00 AM

கிழக்கு மாகாணத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று வேலைநிறுத்த போராட்டம்!

கிழக்கு மாகாணத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று வேலைநிறுத்த போராட்டம்!




கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (13) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் காரணமாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய கண்காணிப்பாளரை பதவியிலிருந்து நீக்கி, அந்தப் பதவிக்கு வேறொருவரை நியமிக்கக்கோரி இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கிழக்கு மாகாணத்திலுள்ள 02 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் 113 முதன்மை வைத்திய நிறுவனங்களில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான ஜனித் பெதுருஆராச்சி தெரிவித்துள்ளார்

No comments: