மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வும், முதலாம் கட்ட நேர்முகத் தேர்வும் சனிக்கிழமை (10) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மருதமுனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர்களும், புதிய மாணவர்களும் பெருமளவில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்வின் போது கல்லூரியின் கல்வி அணுகுமுறை, எதிர்கால கல்வி முன்னேற்றத் திட்டங்கள், நோக்கங்கள் மற்றும் ஒழுக்க அடிப்படையிலான கல்வி வழிமுறைகள் குறித்து கல்லூரி நிர்வாக சபை உறுப்பினர்களும், உஸ்தாத்மார்களும் பெற்றோர்களுக்கு தெளிவாக விளக்கிக் கூறினர்.
மேலும், மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட்டதோடு, அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி வழங்கும் ஹிப்ழ், ஷரீஆ உள்ளிட்ட கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல்களும் பகிரப்பட்டன.
இதனிடையே, புதிய மாணவர் அனுமதிக்கான இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வும் விரைவில் நடைபெற உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு 075 524 7124 (அதிபர்), 077 335 5162 (உப அதிபர்) ஆகிய இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: