காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் திரு. அ. சுந்தர குமார் அவர்கள் தனது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில், அவரை கௌரவிக்கும் சேவை நலன் பாராட்டு விழா காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரன், உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், சபை உறுப்பினர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்டது.
நிகழ்வின் போது, திரு. அ. சுந்தர குமார் அவர்கள் அரச சேவையில் ஆற்றிய நீண்ட கால அர்ப்பணிப்பான சேவை, நிர்வாக திறமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் குறித்து நினைவுகூரப்பட்டு பாராட்டப்பட்டன. அதன் அடையாளமாக அவருக்கு நினைவுச் சின்னமும், கௌரவப்பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், நிகழ்வில் உரையாற்றியோர், தனது சேவை காலம் முழுவதும் பிரதேச சபையின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் நலனுக்கும் உறுதுணையாக செயல்பட்ட அவரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டனர். ஓய்வுபெற்ற பின்னரும் அவர் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
பிரதேச சபை பிரமுகர்கள் பலரினதும் பங்கேற்பு மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களுடன் இந்த சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக நிறைவு பெற்றது.
No comments: