டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நுளம்பு கட்டுப்பாட்டு புகை விசிறல் நடவடிக்கை
அண்மைக்காலமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைவாக (12) திங்கட்கிழமை மாலை நுளம்பு கட்டுப்பாட்டு புகை விசிறல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நடவடிக்கை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை வீதியில் இடம்பெற்றதுடன், டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை தடுக்கும் வகையில் புகை விசிறல் மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்கள் டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில், சுற்றுப்புறங்களை சுத்தமாக பேணுதல், நீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
No comments: