
கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் கிரிடிமதி அடோல், 2026ஐ அதிகாரப்பூர்வமாக வரவேற்றது.
உலகில் புத்தாண்டை முதலில் எதிர்நோக்கும் நாடாக இந்த தீவே உள்ள நிலையில், அதன் பின்னர் பிற பகுதிகள் அடுத்த சில மணிநேரங்களில் புத்தாண்டை எதிர்நோக்கின.
அதன்படி, உலகின் பல நாடுகளில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு கோலாகலமாக வரவேற்கப்பட்டது.
அந்தவகையில், கொழும்பு - காலி முகத்திடலில் திரண்ட மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் லோட்டஸ் டவரில் ஒளிரச் செய்யப்பட்ட பிரம்மாண்ட பட்டாசுக்கள் மற்றும் வான வேடிக்கைகளுடன் இலங்கையும் புத்தாண்டை வரவேற்றது.
அதேநேரம், நியூயார்க், லண்டன், பாரிஸ், துபாய், சிட்னி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வண்ணமயமான பட்டாசுகள் ஆகாயத்தை ஒளிரச் செய்தன.
இசை நிகழ்ச்சிகள், ஒளி–ஒலி காட்சிகள், தெருக்களில் திரண்ட மக்கள் கூட்டம் என புத்தாண்டு கொண்டாட்டம் உச்சத்தை எட்டியது.
புதிய நம்பிக்கை, சமாதானம், வளர்ச்சி என்ற எதிர்பார்ப்புகளுடன் 2026ஆம் ஆண்டு உலகம் முழுவதும் இனிதே ஆரம்பமானது.
No comments: