2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பெரும் வெற்றிகளைப் பெற்று தந்த சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் "GRAND ACHIEVERS' DAY - 2025 " பெருவிழா நேற்று (2025.12.26 ) மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். ஆர். ஹஸந்தி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாதனை மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், சாதனை மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: