News Just In

12/04/2025 05:37:00 PM

பெரியகல்லாறு கடலில் கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம்

பெரியகல்லாறு கடலில் கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம்.



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை (04.12.2025) கரை ஒதுங்கியுள்ளது.

கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் இவ்வாறு பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியிருப்பதை அவதானித்துள்ளனர். இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சுமார் 55 வயது மதிக்கத்தக் பெண் ஒருவரின் சடலம் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது. எனினும் இச் சடலம் தொடர்பில் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என அப்பகுதி பொதுமக்களும், கிராம சேவை உத்தியோகத்தரும் தெரிவித்தனர்

No comments: