மன்னாருக்குள் புகுந்துள்ள இந்திய புலனாய்வாளர்கள்..! எச்சரிக்கும் மன்னார் நகரசபை முதல்வர்
மன்னாரை பயன்படுத்தி அந்நிய சக்திகள் இந்தியாவை தாக்கி விடக்கூடும் என்ற அச்சத்திலே இந்தியா எப்போதும் மன்னாரிலே ஒரு கழுகுப் பார்வையை வைத்திருப்பதாக மன்னார் நகர சபை முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய புலனாய்வாளர்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர் மன்னாரிலே வியாபாரத்தை முன்னெடுப்பது போல நடமாடிக் கொண்டு இருக்கின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலமாக குறித்த பகுதியை விலைக்கு வாங்கி தமது கட்டப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவே தோன்றுவதாகவும் குறிப்பிட்ட அவர் சில தகவல்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்
No comments: