News Just In

12/29/2025 06:08:00 AM

கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்த விஜய்.. சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி

கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்த விஜய்.. சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி


நடிகர் விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரும் ரசிகர்களிடம் உருக்கமாக பேசினார்.

அந்த விழாவில் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட இயக்குனர்கள் மற்றும் பல நடிகர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இன்று மலேசியாவில் இருந்து சென்னைக்கு திரும்பினார் விஜய். அவரை பார்ப்பதற்காக ஏர்போர்ட்டில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது.

ஏர்போர்ட்டில் இருந்து வெளியில் வரும்போது கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார் விஜய். அவர் காரில் ஏற சென்ற போது தவறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments: