News Just In

12/05/2025 06:30:00 AM

நாமல் ராஜபக்சவை சாணக்கியன் தலைவராக ஏற்றபோது போது தமிழ் மக்கள் இறந்தார்கள்! அமைச்சர் எச்சரிக்கை

நாமல் ராஜபக்சவை சாணக்கியன் தலைவராக ஏற்றபோது போது தமிழ் மக்கள் இறந்தார்கள்! அமைச்சர் எச்சரிக்கை ..


தற்போது அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருக்கும் சாணக்கியன் எம்பி மட்டக்களப்பிற்கு சென்று அந்த மக்களை தற்போதுவரை பாரக்கவில்லை என்று கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

முழுநாடும் ஒன்றிணைந்து இருக்கும் போது ஒருசிலர் அதனை சீர்குலைக்க வைக்கின்றனர்.

அரசாங்கம் படுகொலை செய்துவிட்டது என்று தற்போது கூறும் சாணக்கியன், தமிழ் பெண்களை சித்திரவதை செய்து கொலை செய்யும் போதும், தமிழ் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடியும் போதும் ராஜபக்சர்களுடன் இருந்தார்.

நாமல்ராஜபக்சதான் இளம் தலைவர் என்று கூறுகின்ற போதும் மக்கள் செத்தார்கள், படுகொலை செய்யப்பட்டார்கள்.

எனவே இவர்களால் ஒன்றும் நடக்கபோவதில்லை., இது எங்களுடைய அரசாங்கம், எங்களுடைய மக்கள் நாங்கள் அவர்களை பார்த்தக்கொள்வோம் என்று குறிப்பிட்டார்.

No comments: