News Just In

12/15/2025 09:52:00 AM

அனர்த்தங்களை கணிக்க AI மூலம் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்

அனர்த்தங்களை கணிக்க AI மூலம் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்



இலங்கையின் அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கம், அதிநவீன புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனர்த்தங்களைக் கணித்தல், தயாராகுதல் மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் நோக்குடன் “GeoAI for Disaster Resilience” என்ற தேசிய முயற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்,தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஏ. ஹொவெல் (Ms. Jayne A. Howell), இந்த முயற்சியின் மாபெரும் ஆற்றலை வலியுறுத்தினார்.

அவர் குறிப்பிடுகையில், “புதுமைகளைத் தழுவி, மனித வளத்தில் முதலீடு செய்து, GeoAI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அபாயத்தை ஆயத்தமாக மாற்றுவதன் மூலம் அனர்த்த தாங்கும் திறனில் பிராந்தியத்தில் தலைமை தாங்கும் வாய்ப்பு இலங்கைக்கு உள்ளது.

அமெரிக்க புத்தாக்கமும் இலங்கைத் தலைமையுடன் இணைந்து அனைவருக்கும் பாதுகாப்பான, அதிக மீள்திறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்க இந்த முயற்சி பிரதிபலிக்கிறது,” என்றார்.

நிகழ்வில் உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, "அனர்த்த தாங்கும் திறனும் டிஜிட்டல் பொருளாதாரமும் இனி தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் அல்ல.

செயற்கை நுண்ணறிவு, தரவு நிர்வாகம் மற்றும் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு ஆகியவை இப்போது மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் மையமாக உள்ளன,” என்று வலியுறுத்தினார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னாள் மாணவர்களான கலாநிதி நோவில் விஜேசேகர (Dr. Novil Wijesekara) மற்றும் கலாநிதி அஸ்லாம் சஜா (Dr. Aslam Saja) ஆகியோரால் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த முன்முயற்சியானது, அமெரிக்கத் தூதரகத்தின் ஆதரவுடனும் கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இலங்கையின் அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

No comments: