News Just In

12/04/2025 10:53:00 AM

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 19 மாணவர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 19 மாணவர்களுக்கு விளக்கமறியல்



பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 19 மாணவர்களின் விளக்கமறியல் காலம் டிசம்பர் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டதாக கூறப்படும் 19 மாணவர்களும் கடந்த மாதம் 29 ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் நேற்று (03.11.2025) யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் குறித்த மாணவர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

No comments: