கல்முனை மாநகர சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் விரிவான டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் இன்று (17) முன்னெடுக்கப்பட்டன.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு உதவியாளர்களின் பிரசன்னத்துடன் பல வீடுகள் பார்வையிடப்பட்டு, நீர் தேங்க கூடிய இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் அதேவேளையில் நிவர்த்தி செய்யப்பட்டது.
மேலும், டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு, சுத்தமான சூழலை பேணுவதின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
No comments: