News Just In

11/07/2025 12:17:00 PM

அமெரிக்க விமான நிலையங்கள் அதிரடி முடிவு... ரத்தாகும் ஆயிரக்கணக்கான சேவைகள்

அமெரிக்க விமான நிலையங்கள் அதிரடி முடிவு... ரத்தாகும் ஆயிரக்கணக்கான சேவைகள்


அமெரிக்காவில் 40 முக்கிய விமான நிலையங்களில் விமானப் பயணம் 10% வரை குறைக்கப்பட இருப்பதால், வரும் நாட்களில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
விமான சேவை

அமெரிக்க அரசாங்க முடக்கம் நீடிக்கும் என்றால், வேறு வழியின்றி இந்த நடவடிக்கையை முன்னெடுக்க இருப்பதாகவும் அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி அறிவித்துள்ளார்.

இந்த முடிவானது உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே பாதிக்கும் என்றும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்கள் புகார் தெரிவித்த காரணத்தால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் டஃபி தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் முதல் பூங்கா வார்டன்கள் வரை சுமார் 1.4 மில்லியன் ஃபெடரல் ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார்கள் அல்லது கட்டாய ஊதியமில்லா விடுப்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அட்லாண்டா, நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டிசியில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் சேவை குறைப்பால் பாதிக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதாலையே, இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் டஃபி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல ஊழியர்கள் மன அழுத்தத்தால் நோய்வாய்ப்பட்டு வருவதாகவோ அல்லது இரண்டாவது வேலையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவோ தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.


புதன்கிழமை ஃபெடரல் அரசின் நிதி முடக்கம் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட நாள் அரசாங்க முடக்கமாக மாறியுள்ளது. விமான சேவைகளின் குறைப்பு முதலில் 4 சதவீதமாக இருக்கும் என்றும், நவம்பர் 11ம் திகதி 6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு, நவம்பர் 14ம் திகதி 10 சதவீதமாக உயர்த்தப்படும் என்றார்.

இதனால், 40 விமான நிலையங்கள் பாதிக்கப்படும் என்றும் டஃபி குறிப்பிட்டுள்ளார். அதிக பயணிகள் பயன்படுத்தும் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம், நியூயார்க் ஜான் எஃப் கென்னடி ர்வதேச விமான நிலையம்,

சிகாகோ ஓ'ஹேர் ர்வதேச விமான நிலையம், ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் நேஷனல் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்டவையும் பாதிக்கப்படும்.

இந்த ரத்து நடவடிக்கையால் ஒரு நாளைக்கு 3,500 முதல் 4,000 விமானங்கள் வரையில் பாதிக்கலாம். ஆனால், சர்வதேச விமான சேவைகள் வழமையாக சேவைகளை முன்னெடுக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

No comments: