
திருகோணமலை - சேருவில பகுதியிலுள்ள வீதிகளில் பகல் வேளையில் காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால் இவ் வீதியூடாக பயணிப்போர் அவதான பயணிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
பகல் 12.00 மணியிலிருந்து பிற்பகல் 2.00 மணி வரை தோப்பூர் -சேருவில பிரதான வீதியில் காட்டு யானைகள் வீதியை கடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது
இதனால் இவ்விதி ஊடாக பிரயாணம் செய்யும் மக்கள் மிகுந்த அசௌகரிங்களுக்கு மத்தியில் அச்சத்துடன் பயணித்து வருவதை காணமுடிகிறது.
ஆகையால் இதற்கு நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்று தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், பாதசாரிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments: