News Just In

11/21/2025 05:30:00 AM

மட்டக்களப்பு மரப்பாலத்தில்புதிய வீதி மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மரப்பாலத்தில்புதிய வீதி மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.


(மட்டக்களப்பு மொகமட் தஸ் ரீப் )

கிராமப் பிரதேசங்களின் மக்களின் போக்கு வரத்து பாவ னைக்குக்கு தேவையான புதிய வீதிகளை அமைத்து கொடுப்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூடிய கரிசனை காட்டி வருகிறது.

இதற்கமைய செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலடங்கும் மரப்பாலம் பகுதியில்கிராம மக்கள், விவசாயிகள், பாடசாலை மாண வர் களின் போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்ச லாக இருந்து வந்த மரப்பாலம் மயான வீதி யைகொங்கிரிட் வீதியாகப் தற் பொழுது புனரமைப்பு செய்யப் ப்பட்டிருக் கின்றது.

தேசிய மக்கள் சக்தியின் வட்டாரக் குழுக் கள்முன்வைத்த கோரிக் கைக்கமைய பிர தேச அமைப்பாளர் கே. திலகநாதன் எடுத் துக் கொண்ட நடவடிக்கையின் பயனாக தற்பொழுது இந்த புதிய வீதி சுமார் 14 இலட் சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப் பட்டுள் ளது. குறித்த புதிய வீதியை மக்களின் பாவ ணைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (20) நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப் பாளர் கே. திலகநாதன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு இப்புதிய வீதியை சம்பிர தாயபூர்வமாக திறந்து வைத்தார்.

ராஜபுரம் ,மாவிலையாறு. பள்ளச் சேனை, மணிபுரம் ,கெளுத்தி மடு,கற்பானை உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத் துக்கு மேற்பட்ட குடும்பங்கள் தமது அன் றாட போக்கு வரத்துக்காகவும் இப் பிரதேசத் திலுள்ள சுமார் 1200க்கும் மேற் பட்ட வயல் காணிகளுக்கு செல்லும் விவசாயிகளும் பயன்படுத்து கின்ற அத்தியாவசிய பாதை யாகவும் இது கருதப்படுகிறது.

குறிப்பாக இந்த வீதியினூடாக கர்ப்பிணி தாய்மார்களை வைத்திய சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்கும், பாடசாலை மாண வர்கள். பாடசாலைகளுக்கு போக்கு வரத் துக்காக பயன்படுத்தவும் மற்றும் விவசாயி களின் நெல் வயல்களுக்கு செல்லும் அத்தி யாவசிய பாதையான இப்பாதை சேரும் சக தியும் குன்றும் குழியுமாக காணப்படுவ தாக மக்கள் நீண்ட காலமாக குறைபாடு தெரி வித்துவந்தனர்.

இந்தக் குறைபாட்டினை நிவர்த்தி செய்ய எவரும் கவனம் செலுத் தாத நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாண அபிவிருத்தி நிதிஒதுக்கீடு திட்டத்தின் கீழ் இந்த அத்தியாவசிய பாதையை புதிதாக நிருமாணித்துள்ளது .

கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்சோமன் கணேசன் தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ்வில்செங்கலடி பிரதேச உதவி திட்ட மிடல் பணிப்பாளர் எஸ். சுதாகரன் தேசிய மக்கள் சக்தியின் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் இங்கு பிரசன்னமாக இருந்தனர்

No comments: