News Just In

11/10/2025 03:25:00 PM

கைதி ஒருவர் தொடர்பில் வைரலாகும் காணொளி தொடர்பில் விசாரணை

கைதி ஒருவர் தொடர்பில் வைரலாகும் காணொளி தொடர்பில் விசாரணை!



கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஆடம்பரமாக தங்கியிருப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கைதி பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

அந்தக் காணொளியில், குறித்த கைதி தனது கையடக்கத் தொலைபேசியைப் பார்த்துக் கொண்டும், போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டும் இருக்கும் காட்சியுடன், மற்றொரு கைதி அவருக்குத் தலையை மசாஜ் செய்யும் காட்சியும் காணப்படுகின்றது.

இது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எனினும் இந்தக் காணொளியில் இடம்பெறும் சம்பவம் பூஸா சிறைச்சாலையில் நடந்ததல்ல என்று அந்தச் சிறைச்சாலையின் அத்தியட்சகர் உறுதிப்படுத்தியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் தொடர்பில் பூஸா, காலி மற்றும் அகுணுகொலபெலஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளின் அத்தியட்சகர்களுக்கு விரைவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: