தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நிந்தவூர் பிரதேசத்தில் அதை எவ்வாறு எதிர்கொள்வது எனவும், எதிர்வரும் காலங்களில் அவசர கால நிலையை கருத்தில் கொண்டு செயற்படுவதற்கான விசேட கலந்துரையாடல் இன்று நிந்தவூர் பிரதேச சபையில் பிரதேச சபையின் பதில் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஐ.இர்பான் தலைமையில் இடம்பெற்றது.
இதில் அவசர கால கட்ட தீர்மானங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு தடுப்பு வழிமுறைகள் என்பன பற்றியும் தீர்க்கமான முடிவுகள் சபை உறுப்பினர்களை கொண்டு கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: