News Just In

11/17/2025 06:41:00 PM

சட்டவாட்சி,திருமலையில் பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளதா?ஜி. ஸ்ரீநேசன், நாடாளுமன்ற உறுப்பினர்

சட்டவாட்சி,திருமலையில் பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளதா?
ஜி. ஸ்ரீநேசன், நாடாளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு




திருகோணமலையின் கடற்கரையோரமாக சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்று பௌத்த துறவிகளாலும், நல்லிணக்க விரோதிகளாலும் நிறுவப்பட்டுள்ளது.

சட்டவாட்சியை வலியுறுத்தும் தேசிய மக்கள் சக்தியினரின் காவல்துறை அமைச்சர்,முதலில் அச்சிலையை சட்டவாட்சிப்படி அகற்ற நடவடிக்கை எடுத்தார்.இதனால், தேசியமக்கள் சக்தியின் சட்டப்படியான செயலையிட்டு தமிழர்கள் திருப்தியடைந்தனர். ஆனால் சில மணித்தியாலங்களில் பொலிசாரின் பாதுகாப்புடன்,மீண்டும் அந்த சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியையும்,சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தம்மிடம் இனவாதம், மதவாதம் இல்லை என்று மார்பு தட்டிய தேசிய மக்கள் சத்தியினர்,சட்டவாட்சியை விட்டுச் சறுக்கி விழுந்து, பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளார்கள். என்பதை சட்ட விரோத சிலை நிறுவுதலோடு, பொலிசார் சம்பந்தப்பட்டுள்ளதில் இருந்து அறியமுடிகின்றது.

எனவே,பௌத்த அடிப்படைவாதம் சட்டவாட்சியையும் கடந்து, எங்கும் பாயும் என்பதை திருமலைச் சம்பவம் இடித்துரைக்கிறது. இந்நாட்டின் நல்லிணக்கம்,நீதி என்பதெல்லாம் வெறும் கானல் நீராகவே உள்ளது.

அடிப்படைவாதத்த்தின் அடிச்சுவடுகளில் இருந்து விலகி, இலங்கையின் எந்த அரசாங்கத்தாலும் சட்டவாட்சிப்படி நகர முடியாது என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

மாற்றத்தை ஏற்படுத்த வந்தவர்கள்,தமிழ் பேசும் மக்களைச் சீற்றமுறச் செய்து விட்டனர்.தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த ஒவ்வொரு தமிழ்பேசும் குடிமகனும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்

No comments: